Friday 3rd of May 2024 06:12:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மோடி  அதிருப்தி;  ட்ரம்ப் தெரிவிப்பு!

சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மோடி அதிருப்தி; ட்ரம்ப் தெரிவிப்பு!


இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவுக்கு மகிழ்ச்சி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பில் இந்தியப் பிரதமா் மோடியுடன் பேசினேன். அவா் அதிருப்த்தியில் உள்ளதை இதன்போது அறிய முடிந்தது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளாா்.

வொஷிங்டனில் நேற்று செய்தியாளா்களுடன் பேசும்போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய முரண்பாடும்,மோதலும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் மக்கள் என்னை விரும்புகிறார்கள். அமெரிக்காவில் ஊடகங்கள் என்னை விரும்புவதைவிட, இந்தியாவில் இருப்பவர்கள் என்னை அதிகமாக விரும்புகிறார்கள். எனக்கும் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். மோடி சிறந்த மனிதா் எனவும் ட்ரட்ப் கூறினாா்.

இந்தியா-சீனா இடையே மிகப்பெரிய மோதல் நிலவுகிறது. இரு நாடுகளுமே 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகள், இரு நாடுகளிடமும் வலிமையான இராணுவம் இருக்கிறது எனவும் அவா் சுட்டிக்காட்டினாா்.

முன்னதாக நேற்று முன்தினம் புதன்கிழமை தனது ருவிட்டரில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்யத்தயார் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த இந்திய அரசு, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை பேச்சு வார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்கவே விரும்பவதாகத் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதனைக் கூறினாா்.

ட்ரம்பின் இந்த சமரச முயற்சி தொடா்பில் சீனா உத்தியோகபூா்வ கருத்துக்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

எனினும் இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ட்ரம்ப் உதவி தேவையில்லை என சீன அரசின் பத்திரிகையான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைப் பிரச்சினையை இந்தியா - சீனா இரு நாடுகளும் தமக்குள் பேசித் தீா்க்க முடியும். எல்லையில் அமைதியையும், ஒழுங்கையும் குலைக்கும் நோக்கில் செயல்படும் அமெரிக்காவின் முயற்சி குறித்து இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குளோபல் ரைம்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: சீனா, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE